எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் நடிகை லதா

பழம்பெறும் நடிகை லதா இன்று, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது மற்றும் கூட்டணிகளை வலுப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், நடிகை லதா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அலுவலகத்தில் நேரில் சந்தித்து, அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். எடப்பாடி பழனிச்சாமி நடிகை லதாவுக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றார். பின்னர், அவருக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

Related News

Latest News