Sunday, January 5, 2025

சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தினர். அப்போது சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

சித்ரா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நடிகை சித்ராவின் தந்தை சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீது பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest news