விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழா ஒன்றில் நடிகர் விஷால் கலந்து கொண்டார். விழாவில் பேசிய நடிகா் விஷால் மேடையிலிருந்து கீழே இறங்க முற்பட்டபோது திடீரென மயங்கி விழுந்தாா்.
இதையடுத்து உடனடியாக அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. உணவு மாற்றம் மற்றும் காற்று பற்றாக்குறையால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவா் தெரிவித்தாா். இதையடுத்து, விஷால் அங்கிருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடியின் காரில் புறப்பட்டுச் சென்றாா்.