சட்டவிரோத சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியது தொடர்பாக அந்த விளம்பரப் படங்களில் நடித்த திரையுலக பிரபலங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பிரபலமாக இருக்கும் வலைத்தளங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் சட்டவிரோத சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியது தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் விசாரணைக்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ஆஜரானார். தற்போது அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.