Sunday, June 1, 2025

மருத்துவர்களின் கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ….அவருக்கு என்னதான் ஆச்சு?

2012-ம் ஆண்டு வெளியான ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீ. அதன் பிறகு ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’,’வில் அம்பு’, ‘மாநகரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

சமீபத்தில் உடல் எடை மெலிந்த தோற்றத்தில் அவருடைய புகைப்படம் இன்று இணையத்தில் பரவியது. இதனை பார்த்த ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவரது உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியது.

இந்நிலையில் நடிகர் ஸ்ரீ மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர்களின் ஆலோசனைகளின்படி சமூகவலைதளங்களின் இருந்து விலகி இருப்பதாகவும் குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஸ்ரீயின் உடல்நிலை பற்றி பரவும் தவறான தகவல் தங்களுக்கு மிகவும் வருத்தமளிப்பதாகவும் , உடல்நிலை குறித்து வதந்திகள் பரப்புவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news