நகைச்சுவை நடிகராக அறிமுகமான நடிகர் சூரி, தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். அவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாமன்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் `மண்டாடி’ என்ற படத்தில் சூரி நடித்து வருகிறார்.
தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய வீடியோவை சூரி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த பதிவில் ஒருவர், “திண்ணைல கிடந்தவனுக்கு திட்டுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை” என்று கிண்டல் அடித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்த சூரி, ” திண்ணையில் இல்லை நண்பா. பல நாட்களும் இரவுகளும் ரோட்டில்தான் இருந்தவன் நான்…அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும்” என்று அவருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

