Monday, January 26, 2026

‘ரொம்ப முட்டாள்தனமா இருக்கு’ – ரசிகர்கள் குறித்து நடிகர் சூரி வேதனை

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் ‘மாமன்’. இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிராண், சுவாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘மாமன்’ படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. இதனால் படத்துக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

சூரி நடித்த ‘மாமன்’ படம் வெற்றி பெற வேண்டி சூரியின் ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு வேண்டுதல் செய்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த சூரி, மண்சோறு சாப்பிட்டவர்களை தன் தம்பிகள் என்று சொல்வதற்கே தனக்கு வெட்கமாக இருப்பதாக கூறினார்.

படமும் கதையும் நன்றாக இருந்தால் தான் ஓடும் என கூறியுள்ளார். மேலும் இந்த செயல் மிகவும் முட்டாள்தனமானது என்றும், இதுபோன்ற செயலை செய்பவர்கள் தன் ரசிகர்களாக இருக்கக் கூட தகுதியற்றவர்கள் என்றும் கூறியுள்ளார்.

Related News

Latest News