நடிகர் வடிவேலு தன்னை பற்றி யூ-டியூப் சேனல்களில் அவதூறு கருத்துக்களை தெரிவிப்பதாக நடிகர் சிங்கமுத்து மீது வழக்கு தொடர்ந்தார். மேலும் தனக்கு ரூ.5 கோடி நஷ்டஈடு தரவேண்டும் என கூறியுள்ளார்.
இந்த வழக்கு சென்னை உய்ரநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 6ம் தேதி இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த வழக்கை 11ம் தேதி (இன்று) தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது “வடிவேலு குறித்து எந்த அவதூறு கருத்தும் தெரிவிக்க மாட்டேன்” என நடிகர் சிங்கமுத்து தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜனவரி 21-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.