சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரோபோ சங்கர், இவர் நடிப்பில் மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார்.
தற்போது சென்னையில் நடைபெற்று கொண்டிருக்கும் படப்பிடிப்பு ஒன்றில் ரோபோ சங்கர் பங்கேற்று வந்தார், இந்த நிலையில்,புதன்கிழமை காலை படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயக்கமடைந்தார். அவரை உடனடியாக மீட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரோபோ சங்கர் அனுமதிக்கப்பட்டார்.நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.
இந்த சூழலில், நேற்று மாலை அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மருத்துவர்கள் மாற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து ரோபோ சங்கரின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
