Thursday, July 31, 2025

சீரியல் நடிகர் ரவிக்குமார் காலமானார்

பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகர் ரவிக்குமார் (71) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

தமிழில் ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘மலபார் போலீஸ்;, ‘ரமணா’, ‘விசில்’ என இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை வேளச்சேரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரவிக்குமாரின் மறைவுக்கு சினிமா சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News