இயக்குனர் வி.சி.குகநாதன் எழுத்தில் உருவாகி உள்ள “காவி ஆவி நடுவுல தேவி” திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.
காவி ஆவி நடுவுல தேவி திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு நாயகனாக நடித்துள்ளார்.திகில் கலந்து நகைச்சுவை திரைப்படமான இது விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இந்நிலையில், காவி ஆவி நடுவுல தேவி படத்தின் டிரெய்லரை பார்த்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
இது குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.