Saturday, January 31, 2026

75வது பிறந்தநாளை காணும் நடிகர் ரஜினிகாந்த் : அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து

75வது பிறந்தநாளை காணும் நடிகர் ரஜினிகாந்துக்கு, பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வாழ்த்து

“ரஜினிகாந்த் தனது நடிப்பாற்றலால் பல தலைமுறைகளை கவர்ந்துள்ளார் என்றும் ரஜினிகாந்தின் திரையுலக படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரை பதித்துள்ளன எனவும் பாராட்டியுள்ளார். திரைப்பட உலகில் ரஜினிகாந்த் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது குறிப்பிடத்தக்க அம்சம் என்றும் அவர் நீண்டகாலம், ஆரோக்கியமான வாழ்க்கை வாழ பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

“உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம் கொண்டவர் என்று குறிப்பிட்டு, நடிகர் ரஜினிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் என்றால் வயதை வென்ற வசீகரம், மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்” என பாராட்டியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

“தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமையாக, 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் ரஜினிகாந்துக்கு, தனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திரையரங்குகளை திருவிழா கூடங்களாக மாற்றவல்ல தங்களின் Style, Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். பிறந்த நாள் காணும் ரஜினிகாந்தை அலைபேசியில் தொடர்புகொண்டு, பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

நடிகர் கமல்

75 ஆண்டுகள் சிறப்பான வாழ்க்கை, 50 ஆண்டுகள் புகழ்பெற்ற சினிமா என குறிப்பிட்டு, நடிகர் ரஜினிகாந்துக்கு, மக்கள் நீதி மய்ய தலைவரும், எம்.பியும், நடிகருமான கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தாங்கள் ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து

பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிகாந்துக்கு, பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நல்ல உடல்நலத்துடன், நூறாண்டு வாழ்ந்து மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.

Related News

Latest News