மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால். தொடர்ச்சியாக மலையாளத்தில் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அவரின் நடிப்பில் அண்மையில் வெளியான ஹிருதய பூர்வம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
நடிகர் மோகன்லாலுக்கு மத்திய அரசு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று 71வது தேசிய விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
நடிகர் மோகன்லால் இதுவரை 5 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். 9 மாநில அரசின் விருதுகளை வென்றுள்ளார். இது தவிர, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகள் வழங்கி மத்திய அரசு இவரை கவுரவித்துள்ளது.
