இயக்குனர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 48.
இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. அதன்பிறகு சமுத்திரம், ஈரநிலம், வருஷமெல்லாம் வசந்தம், மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் இன்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். .
இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.