Thursday, February 19, 2026

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

ஆந்திராவைச் சேர்ந்த இவர் தெலுங்கு மற்றும் தமிழில் குணசித்திர, வில்லன் வேடங்களில் மொத்தம் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘சாமி’ படத்தில் ‘பெருமாள் பிச்சை’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தனித்துவமான நடிப்பால் புகழ் பெற்றார்.

கடந்த சில தினங்களாக, உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட நடிகர் கோட்டா சீனிவாச ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related News

Latest News