தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ திரைப்படத்தின் மூலம் ‘ஜெயம் ரவி’ என்ற பெயரில் பிரபலமடைந்தார். அதன் பிறகு பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
இந்நிலையில் தற்போது ஜெயம் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் இனி என்னை ஜெயம் ரவி என யாரும் அழைக்க வேண்டாம். ரவி அல்லது ரவி மோகன் என்றே அழைக்கப்பட விரும்புகிறேன் என தெரிவித்து இருக்கிறார்.மேலும் ரவி மோகன் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி இருப்பதாகவும் அவர் அறிவித்து உள்ளார்.