Wednesday, February 18, 2026

விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் படப்பிடிப்பின்போது நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஓட்டிச் சென்ற ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

ஜகமே தந்திரம் (Jagame Thandhiram) திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர், கமல்ஹாசனின் Thug Life படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் படப்பிடிப்பில் ஒன்றில் ஜோஜு ஜார்ஜ் ஓட்டி வந்த ஜீப் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஜோஜு ஜார்ஜ், நடிகர் தீபக் பாரம்போல் உட்பட துணை நடிகர்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் உடனடியாக மூணாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related News

Latest News