நடிகையும் தனது தோழியுமான பவித்ரா கவுடாவை சமூகவலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சாமி என்பவரை கடத்தி சென்று கொலை செய்ததாக நடிகர் தர்ஷன் மீது புகார் எழுந்தது. இந்த வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள் என 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில், தர்ஷன் உட்பட 10 பேருக்கு பிணை வழங்கி அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் தர்ஷனுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய பிணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமின் ரத்து செய்யப்பட்ட நிலையில் நடிகர் தர்ஷனை பெங்களூருவில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.