மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் படத்தில் த்ரிஷா, சிம்பு, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் ‘தக் லைஃப்’ படத்தை பார்த்த நடிகர் சின்னி ஜெயந்த் சிம்புவின் நடிப்பை பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சின்னி ஜெயந்த், தக்லைப் திரைப்படத்தில் சிம்புவின் நடிப்பை வெகுவாக பாராட்டியிருக்கிறார். சிம்புவை நாம் முன்பு எப்படி அழைப்போம். லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று தானே அழைப்போம். அவர் இப்போவும் லிட்டில் சூப்பர் ஸ்டார் தான் என பேசியுள்ளார்.