தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். இவர் நடித்துள்ள விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன. சினிமாவில் நடிப்பதை கடந்து கார், பைக் ரேஸ் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.
துபாயில் வருகிற 12 மற்றும் 13-ந் தேதிகளில் 20-வது சர்வதேச கார் பந்தயம் நடைபெறுகிறது. அதற்காக துபாய் வந்த நடிகர் அஜித்குமார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்கான பயிற்சியை எடுத்து வருகிறார். இந்நிலையில் துபாயில் நடைற உள்ள கார் பந்தயத்தில் பங்கேற்கும் நடிகர் அஜித், அக்டோபர் மாதம் வரை நடிக்கப் போவது இல்லை என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக நடிகர் அஜித் கூறியதாவது:- 18-வயதில் ரேசிங் தொடங்கினேன். அதன்பின் சினிமாவில் நடித்து வந்ததால் ரேசில் பங்கேற்கவில்லை. 2010- ஆம் ஆண்டு European-2 இல் களமிறங்கினேன். பின்னர் போட்டிகளில் பங்கேற்க இயலவில்லை. தற்போது கார் பந்தய முடிவடையும் வரை எந்த படத்திலும் நடிக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.