தமிழ் சினிமாவில் ‘சாக்லெட் பாய்’ என அறியப்பட்ட நடிகர் அப்பாஸ், 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையுலகில் வர உள்ளார். 1996 ஆம் ஆண்டு “கதிரின் காதல் தேசம்” என்ற படத்தினால் கதாநாயகனாக அறிமுகமான அப்பாஸ், தொடர்ந்து “விஐபி”, “பூச்சூடவா” உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
இந்நிலையில் 10 வருடங்கள் இடைவெளிக்கு மீண்டும் சினிமாவில் ‘ரீ என்ட்ரி’ கொடுக்கவுள்ளார். அதாவது, மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்துவரும் படத்தில் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.