Wednesday, May 7, 2025

பழைய கேன்களில் தண்ணீர் விற்பனை செய்தால் நடவடிக்கை – உணவு பாதுகாப்பு துறை

கோடை வெயில் எதிரொலியின் காரணமாக கேன் வாட்டர் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கேன் வாட்டர் குடிநீரின் தரத்தை முழுமையாக பின்பற்ற வேண்டும். அடைக்கப்பட்ட குடிநீரில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி அச்சிடப்பட வேண்டும் என்றும் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

குடிநீர் கேன்கள் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பி பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறிடும் பட்சத்தில் மீண்டும், மீண்டும் குடிநீரை நிரப்பி விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும்.

தரமின்றி, முறையான அனுமதியின்றி அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை கூறியுள்ளது.

Latest news