காலாண்டு விடுமுறையின் போது மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் திட்டமிட்ட நிலையில், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு இன்றுடன் முடிவடைகிறது. இதனையடுத்து நாளை முதல் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிற அக்டோபர் மாதம் 6ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 6 நாட்கள் விடுமுறையிலும் சிறப்பு வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை நாட்களில் பள்ளிகளை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.