Tuesday, April 22, 2025

‘ஹேப்பி ஹோலி’ எனக்கூறி கோயில் கணக்காளர் தலையில் ஆசிட்டை ஊற்றிய நபர்

நாடு முழுவதும் நேற்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ஹைதராபாத் நகரில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்தது. அடையாளம் தெரியாத ஒருவர் சைதாபாத்தில் உள்ள ஒரு கோயிலுக்குள் நுழைந்து, கணக்காளரின் தலையில் ஆசிட்டை ஊற்றி ‘ஹேப்பி ஹோலி’ என்று கூச்சலிட்டு, சென்றுள்ளார். இந்த கொடூரமான சம்பவத்தின் காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன.

இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த கணக்காளர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சைதாபாத் கோவிலில் நடந்த ஆசிட் வீச்சு சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபரைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Latest news