Sunday, December 28, 2025

புதிதாக கட்டப்பட்ட ஜிடி நாயுடு மேம்பாலம் அருகே விபத்து – 3 பேர் பலி

கோவை உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட மேம்பாலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டுவின்ஸ் பகுதிக்கு ஜிடி மேம்பாலத்தில் சென்ற கார், பாலத்தில் இருந்து வேகமாக இறங்கிய போது கட்டுப்பட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணித்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேரின் உடல்களையும் போலீஸார் மீட்டு, கோவை சிங்காநல்லூர் பகுதியிலுள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

Related News

Latest News