Sunday, March 16, 2025

உத்தரபிரதேசத்தில் நதியில் படகு கவிழ்ந்து விபத்து : 3 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரில் உள்ள சாரதா நதியில் சென்று கொண்டிருந்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 7 பேரை பத்திரமாக மீட்டனர். இவர்களில், 13 வயது சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இன்று காலை 11 மணியளவில் இறந்த உடலை தகனம் செய்வதற்காக சிலர் ஆற்றைக் கடக்கும்போது இந்த விபத்து நிகழ்ந்தது. இதனால் அந்தப் பகுதியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது.

Latest news