கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
இதனிடையே, விஜய் பிரசார பேருந்தின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விஜய் பிரசார பேருந்தின் முன்பு பைக்கில் சென்று சிலர் வீடியோ எடுக்கின்றனர். அப்போது இரண்டு பைக்குகள் இடித்ததில் தடுமாறி கீழே விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். விஜய் ரசிகர்களின் இத்தகைய செயல்கள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.