சர்வதேச முன்னணி பெரு நிறுவனங்களில் ஒன்றான அக்சென்ச்சர், உலகம் முழுவதும் உள்ள தன்னுடைய நிறுவனங்களில் பணியாற்றி வந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை கடந்த மூன்று மாதங்களில் பணிநீக்கம் செய்திருக்கிறது.
செய்யறிவு துறையின் அதிகவேக வளர்ச்சி, பெருநிறுவன தேவைகள் குறைவு போன்றவை இந்த பணி நீக்கத்திற்கு காரணம் என நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஊழியர்களின் பணி நீக்கத்தால் நிறுவனம் 1 பில்லியன் டாலர் அளவுக்கு செலவினத்தைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.