ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த லூதியானா மேற்கு தொகுதி எம்.எல்.ஏ குர்பிரீத் கோகி பஸ்ஸி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
குர்பிரீத் கோகி துப்பாக்கி குண்டு காயங்களுடன் கிடந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும், காவல் ஆணையாளர் குல்தீப் சஹால் மற்றும் காவல் துணை ஆணையாளர் ஜிதேந்திரா ஜோர்வால் ஆகியோரும் மருத்துவமனைக்கு நேரில் சென்றனர்.
கோகிக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர். 2 முறை கவுன்சிலராக இருந்த கோகி, 2022-ம் ஆண்டு எம்.எல்.ஏ.வானார்.