Monday, February 2, 2026

வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகா ஹுனசேகரே கிராமத்தை சேர்ந்த 24 வயதுடைய இந்திரா என்பவருக்கு, ஹாசன் தாலுகா எச். மைலள்ளி கிராமத்தை சேர்ந்த சாமி என்பவருடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, இந்திராவின் பெற்றோர் 60 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கத்தை வரதட்சணையாக வழங்கியுள்ளனர்.

திருமணம் ஆகி 4 ஆண்டுகள் கடந்தும் தம்பதிக்கு குழந்தை இல்லாததால், அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், சாமியின் தாய் சங்கரம்மா மற்றும் அவரது சகோதரி ஆகியோர் இணைந்து கூடுதல் வரதட்சணை கேட்டு இந்திராவை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்திராவின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாக கூறியும் அவர் அவளை அடிக்கடி மனதளவில் வதைத்துள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த இந்திரா விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனை பார்த்த சாமி மற்றும் அவரது குடும்பத்தினர், உடனடியாக அவரை ஹாசனில் உள்ள கிம்ஸ் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், இந்திரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இந்திராவின் பெற்றோரின் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News