குஜராத் மாநிலம் வதோதராவில் இரண்டு பானி பூரிக்காக பெண் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. சுர்சாகர் லேக் பகுதியில், சாலையோர கடையில் பெண் ஒருவர் பானி பூரி சாப்பிட சென்றுள்ளார்.
அப்போது 20 ரூபாய்க்கு பானி பூரி கேட்டுள்ளார். 20 ரூபாய்க்கு 6 பானி பூரி என கூறிய கடைக்காரர் 4 பானி பூரி மட்டுமே கொடுத்துள்ளார். அந்த பெண் கடைக்காரரிடம் 2 பானி பூரி கேட்டுள்ளார். அதற்கு கடைக்காரர் தர மறுத்துள்ளார்.
இதையடுத்து கடைக்காரரிடம் இருந்து தனக்கு நீதி வேண்டும் என நடுசாலையில அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைக்க, அவர்கள் அந்த பெண்ணை நடுரோட்டில் இருந்து அப்புறப்படுத்தினர்.
