பொதுவாகவே பாஸ்வோர்ட் செட் செய்யும் போது யாரும் எளிதில் கண்டுபிடிக்காத வகையில் கடினமான வைக்க வேண்டும். மிக எளிமையான பாஸ்வேர்டை வைத்ததால் பிரிட்டனை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் 700 ஊழியர்கள் வேலையை இழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த போக்குவரத்து நிறுவனம் தான் கேஎன்பி லாஜிஸ்டிக்ஸ். கிட்டதட்ட 158 ஆண்டுகளாக பிரிட்டனில் இயங்கி வருகிறது. இங்கே பணிபுரிந்த ஊழியர் ஒருவர் தனது கணினியின் பாஸ்வேர்டை மிக எளிமையானதாக வைத்திருந்தார்.இதை பயன்படுத்திக்கொண்ட ஹேக்கர்கள் இந்த நிறுவனத்தின் கணினிகளை ஹேக் செய்துள்ளனர்.
நிறுவனத்தின் அனைத்து டேட்டாக்களையும் திருடி பணம் தருமாறு நிறுவனத்திற்கு மிரட்டல் விடுத்துள்ளனர் . அவர்கள் கேட்ட பணம் அதிகமாக இருந்ததால் அதனை கொடுக்க முடியாமல் சிக்கித் தவித்த அந்த நிறுவனம் தற்போது மூடும் நிலைக்கு வந்திருக்கிறது. இதனால் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த 700 ஊழியர்கள் வேலையை இழந்திருக்கின்றனர்.
திருடப்பட்ட டேட்டாக்களை திரும்ப வழங்க வேண்டும் என்றால் ஹேக்கர்கள் ஐந்து மில்லியன் பவுண்டுகளை கேட்கின்றனர், அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 58 கோடி ரூபாயாக இருக்கும் என சொல்லப்படுகிறது.