பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த 786 பேர் இந்தியாவில் இருந்த வெளியேறியுள்ளனர். இவர்களில் பாகிஸ்தான் தூதரகத்தைச் சேர்ந்த 55 அதிகாரிகளும் அடங்குவார்கள்.