அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது போட்ட வரி, இப்போது அதன் வேலையைக் காட்டத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறது.
நம்மில் பலரும் பெட்ரோல் போடும், ‘நயாரா எனர்ஜி’ நிறுவனத்திற்கு எதிராகத்தான். இனிமேல், நயாரா எனர்ஜியின் எந்தவொரு வர்த்தகப் பரிவர்த்தனையையும் நாங்கள் கையாள மாட்டோம் என்று SBI அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்த நயாரா எனர்ஜி, ஒரு காலத்தில் ‘எஸ்ஸார் ஆயில்'(Essar Oil) என்று இருந்தது. இப்போது, இதன் பெரும்பான்மையான பங்குகள் ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ‘ரோஸ்நெஃப்ட்’ (Rosneft) வசம் உள்ளது.
டிரம்ப் இந்தியா மீது விதித்திருக்கும் புதிய வரிகளால், ரஷ்ய நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்தால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பொருளாதாரத் தடைகளில் சிக்கி விடுவோமோ என்று SBI அஞ்சுகிறது.
சுருக்கமாகச் சொன்னால், “ரஷ்ய நிறுவனத்துடன் நாங்கள் வர்த்தகம் வைத்துக்கொண்டால், அமெரிக்கா எங்கள் வங்கி மீது நடவடிக்கை எடுத்துவிடுமோ” என்ற அச்சத்தில்தான் SBI இந்த முடிவை எடுத்திருக்கிறது.
டிரம்ப் போட்ட தடைகள், பேப்பரில் மட்டும் இல்லை, அது இந்தியாவிற்குள் இருக்கும் வர்த்தகத்தையே நேரடியாகப் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது என்பதற்கு இதுதான் மிகப்பெரிய உதாரணம்.
இதேபோல, மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் சமீபத்தில் நயாராவுக்குத் தனது சேவைகளை நிறுத்தியது. பின்னர், நயாரா டெல்லி உயர் நீதிமன்றத்திற்குச் சென்ற பிறகுதான், சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டன.