Thursday, August 21, 2025
HTML tutorial

‘Fail’ இல் முடிந்த யுக்தி! பாகிஸ்தானை கழட்டிவிட்ட சீனா! பதற வைத்த இந்தியா!

பாகிஸ்தானின் பயங்கர யுக்தி… ‘FAIL’ல் முடிந்தது! சீனாவின் மீது நம்பிக்கை வைத்த பாகிஸ்தான், இப்போது இந்தியா முன்னிலையில் முழுமையாக வீழ்ந்துள்ளது!

பாகிஸ்தான் ஆதரவு கொண்ட பயங்கரவாதிகள், கடந்த மாதம் 22ம் தேதி, காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரமான தாக்குதல் நடத்தினர். 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பொறுப்பேற்றது “தி ரெசிஸ்டன்ட் ஃப்ரண்ட்” எனும் அமைப்பு. இது லஷ்கர் இ தெொய்பாவுக்குத் துணை அமைப்பாக செயல்படுகிறது.

இந்த கொடூரத்திற்கு, இந்தியா ஒரே ஒரு வார்த்தையில் பதில் சொன்னது – தாக்குதல்!

நள்ளிரவில், வெறும் 25 நிமிடங்களில், இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” எனும் ராணுவ நடவடிக்கையை தீவிரமாக செயல்படுத்தியது. ரஃபேல் போர் விமானங்களில் ஏவுகணைகள், ஹம்மர் குண்டுகள் மூலம் பாகிஸ்தானிலும், பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன.

மொத்தம் 70 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனர். இது ஒரு சாதாரண தாக்குதல் இல்லை – திட்டமிட்ட, தீவிரமான பதிலடி!

இதற்கெல்லாம் எதிர்பார்த்த பாகிஸ்தான், சீனாவிடம் வாங்கிய HQ-9 ஏவுகணை தடுப்பு அமைப்பை தயாராக வைத்திருந்தது. ரஷ்யாவின் S-300க்கு நிகராக விளம்பரம் செய்யப்பட்ட இந்த சீனா தயாரிப்பு, முக்கிய தருணத்தில் முடங்கிப் போனது! இந்தியா வீசிய ஏவுகணைகள், வானிலேயே தடுக்கப்படாமல் நேராக பயங்கரவாத முகாம்களை தாக்கின.

சீனாவின் பொருட்கள் பற்றி வழக்கமாகச் சொல்லப்படும் குறைபாடுகள் – இப்போதுதான் பாகிஸ்தானுக்கு உண்மையே  தெரிய வந்துள்ளது… ஆபத்து நேரத்தில் சீனாவின் தளம் தளர்ந்தது!

இந்த தாக்குதலால், பாகிஸ்தானும் பதறுகிறது, சீனாவும் நடுக்கம் அடைகிறது. இந்தியா மட்டும்… தன்னைத் தானே உலகுக்கு நிரூபித்திருக்கிறது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News