Tuesday, December 23, 2025

கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரயில்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு நெல்லை-தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

நெல்லையில் இருந்து வருகிற 28, ஜனவரி 4 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரயில் (வண்டி எண்.06166), கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வருகிற 29, ஜனவரி 5 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரயில் (06165), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் அதிகாலை 4 மணிக்கு நெல்லை சென்றடையும்.

Related News

Latest News