Tuesday, December 9, 2025

நிறுவனத்தின் ஒற்றை தவறால் ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்

சிலி நாட்டை சேர்ந்த நபர் ஒருவருக்கு, அவரது நிறுவனம், சம்பளத்தை 300 மடங்கு அதிகமாக கிரெடிட் செய்துள்ளது. சம்பந்தப்பட்ட இந்த ஊழியர், அலுவலக உதவியாளராக பணியாற்றி இருக்கிறார். இவருக்கு மாத சம்பளமாக சுமார் 386 பவுண்டுகள் அதாவது, இந்திய ரூபாய் மதிப்பின் படி, 46,162 வழங்கப்பட்டு வந்துள்ளது.

2022ஆம் ஆண்டு மே மாதம் pay roll-ல் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, இவருக்கு 127,000 பவுண்ட்கள் கிரெடிட் செய்யப்பட்டுள்ளது. இது, இந்திய மதிப்பின்படி, ரூ.1,51,88311 ஆகும்.

ஆரம்பத்தில், தான் அந்த பணத்தை திருப்பி தந்து விடுவதாக கூறிய அவர் அடுத்த 3 நாட்களில் தன் வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். இதையடுத்து அந்த நிறுவனம் அவர் மீது நீதிமன்றத்தில் திருட்டு வழக்கு தொடுத்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக, இது குறித்த வழக்கு விசாரணை நடந்து வந்துள்ளது.

சாண்டியாகோவில் உள்ள ஒரு நீதிபதி, இந்த சம்பவம் திருட்டுக்கு சமமானதல்ல என்றும், அதற்கு பதிலாக அதை அங்கீகரிக்கப்படாத சேகரிப்பு என்று வகைப்படுத்தி தீர்ப்பளித்தார்.

நீதிமன்றம் இதை திருட்டு வழக்காக ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், சம்பந்தப்பட்ட நிறுவனம், அந்த காசை சட்டத்தின் வழியே வாங்க முயற்சி செய்து வருகிறது.

Related News

Latest News