இனிப்பு பிரியர்களுக்கு அதிர்ச்சி… நெல்லையில் அல்வா விலை உயர்வு…எவ்வளவுன்னு தெரியுமா?

சர்க்கரையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், திருநெல்வேலி அல்வா உள்ளிட்ட இனிப்பு மற்றும் கார வகைகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஒரு கிலோ சர்க்கரை ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், படிப்படியாக உயர்ந்து நேற்று ரூ.75 ஆக விற்பனையானது. இதனால் இனிப்புக் கடை உரிமையாளர்களுக்கு உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது.

நெல்லை சந்திப்பில் உள்ள பிரபல மிட்டாய் கடையில் ஒரு கிலோ அல்வா ரூ.320-லிருந்து ரூ.340 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மிக்சர், காரசேவு உள்ளிட்டவற்றின் விலையும் ரூ.20 அதிகரித்துள்ளது.

சிப்ஸ் ரூ.380, பால்கோவா ரூ.500, பால் அல்வா ரூ.500, ஸ்பெஷல் மைசூர்பாகு ரூ.540 என விற்பனை செய்யப்படுகிறது. மற்றொரு கடையில் அல்வா ஏற்கனவே ரூ.340-க்கு விற்பனையாகிறது.

நெல்லை டவுன் இருட்டுக்கடை அல்வா ரூ.440-க்கும், அருகிலுள்ள கடைகளில் ரூ.360-க்கும் விற்கப்படுகிறது. மேலும், விலையை கிலோவுக்கு ரூ.40 வரை உயர்த்த பரிசீலனை செய்து வருவதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related News

Latest News