நகைப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ் …

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருவது நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, பாதுகாப்பான முதலீடாக கருதிய முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்தனர். இதனால் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை பெரிய அளவில் உயராமல், ரூ.1.05 லட்சம் முதல் ரூ.1.10 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தற்போது போர் பதற்றம் ஓய்ந்துள்ள நிலையில், தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. நேற்றும் தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்றும் உயர்வு தொடர்ந்துள்ளது.

அதன்படி, இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,220-க்கும், சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.1,13,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2.60 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலை நகை வாங்குவோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News