Wednesday, July 30, 2025

ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதியே இல்லத்தரசிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!!

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கியாஸ் சிலிண்டர்கள் நிரப்பும் பிளாண்டுகள் தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 12 இடங்களில் செயல்பட்டு வருகிறது.

இங்கு லோடு ஏற்றி செல்லும் லாரிகளுக்கு ஒப்பந்தப்படி லோடு கொடுப்பதில்லை. மேலும் போக்குவரத்து ஒழுங்கு முறையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொண்டுள்ளதால் அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே தமிழ்நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவன பிளாண்டுகளில் இருந்து இயங்கும் சிலிண்டர் லாரிகள் வருகிற 1-ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு எல்.பி.ஜி. கியாஸ் சிலிண்டர் லாரிகள் உரிமையாளர் சங்கத் தலைவர் செந்தில் செல்வன் கூறுவது; இது சம்பந்தமாக பெருந்துறையில் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்படாதால் இந்த வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது என்றார். இதனால் சிலிண்டரில் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News