தரை தட்டியதால் ஜப்பான் நாட்டுக் கடலில்
பனாமா நாட்டுக் கப்பல் திடீரென்று இரண்டாகப்
பிளந்து மூழ்கியது.
கிரிம்ஸன் போலாரிஸ் என்ற பெயர்கொண்ட 39 ஆயிரத்து
910 எடையுள்ள இந்த சரக்குக் கப்பல் ஹச்சிநோகே
என்னும் துறைமுகம் வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது
தரை தட்டி நின்றது.
வானிலை மோசமாக இருந்ததால் தொடர்ந்து போகமுடியவில்லை.
இதனால் துறைமுகத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில்
நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது.
மறுநாள் (ஆகஸ்ட் 11 ஆம் தேதி) இரண்டாகப் பிளந்தது.
இதைத் தொடர்ந்து கடலில் எண்ணெய்க் கசிந்து பரவத் தொடங்கியது.
5 கிலோ மீட்டர் நீளத்துக்கும் ஒரு கிலோ மீட்டர் அகலத்துக்கும்
எண்ணெய் படர்ந்து படலமாகக் காட்சியளித்தது.
அதேசமயம், தொடர்ந்து எண்ணெய்ப் படலம் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது.
கப்பலில் இருந்த 21 பேரும் ஜப்பான் நாட்டுக் கடற்படையால்
காப்பாற்றப்பட்டுவிட்டனர். உடைந்த கப்பலின் பின்பகுதி கடலில்
மூழ்கியது. இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.