தேனி அருகே பேக்கரியில் உள்ள பாத்திரங்கள் மீது எலிகள் விளையாடும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே செயல்பட்டு வரும் பேக்கரியில் சுகாதாரமற்ற முறையில் பட்டப் பகலில் உணவு தயாரிக்கும் பாத்திரங்கள், உணவு பண்டங்கள் மீது எலிகள் சர்வ சாதாரணமாக விளையாடி வருகிறது. எனவே, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்ட பேக்கரி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.