https://www.instagram.com/p/CYOR58Clp6a/?utm_source=ig_web_copy_link
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மூத்த மகளுக்குத் திருமணம் முடிவாகியுள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான்- சாய்ரா பானு தம்பதிக்கு அமீன் என்னும் மகனும், கதீஜா, ரெஹிமா என இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகள் கதீஜாவுக்குத் தற்போது திருமணம் முடிவாகியுள்ளது. நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் சில நாட்களுக்குமுன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இதுபற்றித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கதீஜா குறிப்பிட்டுள்ளார்.
அதில், கடவுளின் ஆசிர்வாதத்தோடு இந்த மகிழ்ச்சியான செய்தியை அறிவிக்கிறேன். சவுண்ட் எஞ்ஜினீயர் ரியாஸ் தீன் ஷெய்க் முகம்மதுவுடன் எனக்கு டிசம்பர் 29 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது என்று கூறி மணமகனின் போட்டோவையும் பகிர்ந்துள்ளார். திருமணத் தேதி அறிவிக்கப்பட்டவில்லை.
ஏ.ஆர்.ரஹ்மானே அறிவிக்காத நிலையில், அவரது மகளே வெளியிட்டுள்ள இந்தத் தகவல் வலைத்தளங்களில் வைரலாகத் தொடங்கியுள்ளது.
கதீஜா இசை ஆல்பங்களை வெளியிட்டு வருவதோடு, தனிப் பாடல்களையும் பாடிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.