குஜராத்தில், ஆசிரியர் ஒருவரை பள்ளி தலைமையாசிரியர் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. பள்ளியின் கணித ஆசிரியர் மீது அடுத்தடுத்து புகார்கள் எழுந்த நிலையில், ஆசிரியரை விசாரணைக்காக தனது அறைக்கு அழைத்து தலைமையாசிரியர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.