செங்கல்பட்டில் மதுபோதையில் காரை அதிவேகமாக ஓட்டி சென்றவர், காவலர்களை கடுப்பாக்கும் வகையில் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தாம்பரம் நோக்கி அதிவேகமாக வந்த கார், சில வாகனங்களின் மீது இடித்துவிட்டு சென்றது.
இதனையடுத்து சிங்கப்பெருமாள் கோவில் அருகே போக்குவரத்து போலீசார் காரை மடக்கி பிடித்தனர். அப்போது, காரை ஓட்டி சென்ற இளைஞர், மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. காவலரின் கேள்விக்கு, தான் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்றும், தன் பெயர் கோபால் எனவும் கடுப்பாக்கும் வகையில் பேசினார். பின்னர் விசாரணையில் அவர் உத்தரமேரூர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்ததை அடுத்து, காரை பறிமுதல் செய்த போலீசார், ஆட்டோவை வரவைத்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.