செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மைதானத்தில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையம் அருகே உள்ள செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மைதானத்தில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரிடம், செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் வடபாதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் சிக்கி இருக்கிறார். 25 வயதான விக்னேஷிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில அடைத்தனர்.
