ஒரு பேனாவின் விலை ரூ.67 கோடி! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பேனாவின் விலை ரூ.5 முதல் ரூ.100 வரைதான் இருக்கும். பிரபல நிறுவனங்களின் சொகுசு பேனாக்கள் சில ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் உலகிலேயே ஒரு பேனா சுமார் ரூ.67 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இத்தாலியைச் சேர்ந்த புகழ்பெற்ற சொகுசு பேனா தயாரிப்பு நிறுவனமான டிபால்டி (Tibaldi) உருவாக்கிய ‘ஃபல்கோர் நாக்டர்னஸ்’ (Fulgor Nocturnus) என்ற பேனாதான் அது. உலகின் மிக விலையுயர்ந்த பேனையாக இது கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

இந்த பேனாவில் 945 அரிய கருப்பு வைரங்களும், 123 மாணிக்கக் கற்களும் பதிக்கப்பட்டுள்ளன. மேலும் 18 கேரட் தங்கம் மற்றும் ருத்தேனியம் உலோகப் பூச்சும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மற்றொரு சிறப்பம்சம், புகழ்பெற்ற கணித விகிதமான 1.618 என்ற கோல்டன் ரேஷியோ அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகும். பேனாவின் மூடி மற்றும் மற்ற பகுதிகளின் அளவுகள் இந்த விகிதத்தைப் பின்பற்றுகின்றன.

2010-ஆம் ஆண்டு சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற ஏலத்தில் இந்தப் பேனா 8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.67 கோடி.

ஒரு சாதாரண பேனாவின் விலையை நினைத்துப் பார்த்தால், இந்தப் பேனாவின் விலை நிச்சயம் பிரமிக்க வைக்கிறது!

Related News

Latest News