தர்மபுரி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், மக்களை அச்சுறுத்தும் வகையில் இரவில் கத்தியுடன் வலம் வருவதால் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டியில், இரவில் கத்தியுடன் உலா வரும் மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், திடீரென வீட்டு கதவுகளை தட்டுவதாகவும், சாலையோரம் நிற்கும் பைக்குகளை அடித்து சேதப்படுத்துவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
விசாரணையில், சம்பந்தப்பட்ட இளைஞர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இளைஞரை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்துமாறு போலீசாரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.