அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மெகா சர்ப்ரைஸ்! காலணி முதல் ரெயின்கோட் வரை இலவசம்!

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முன்னெப்போதும் இல்லாத வகையில் மலைப்பகுதி மாணவர்களுக்கு இலவசமாக ரெயின்கோட் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 2027-2028 கல்வியாண்டை முன்னிட்டு ஒரே நாளில் 4 முக்கிய டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த டெண்டர்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.52 கோடியாகும். இதன்படி, மாணவர்களுக்கு இலவச காலணி வழங்க ரூ.37.24 கோடியும், காலுறைகள் வழங்க ரூ.9.07 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மலைப்பகுதிகளில் படிக்கும் மாணவர்களுக்காக ரூ.3.32 கோடி மதிப்பில் 91,771 ரெயின்கோட்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. செர்ரி சிவப்பு நிறத்தில் 28, 30, 32 மற்றும் 34 இன்ச் அளவுகளில் இவை தயாரிக்கப்பட உள்ளன. கோவை, நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, கொல்லிமலை உள்ளிட்ட பல்வேறு மலைப்பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள்.

மேலும், குளிர்காலத்தில் மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்கு வருவதற்காக ரூ.2.42 கோடி மதிப்பில் கம்பளி ஸ்வெட்டர்களும் வழங்கப்பட உள்ளன.

முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், நவீன சைக்கிள்கள், குழந்தைகள் தின கேக் உள்ளிட்ட திட்டங்களைத் தொடர்ந்து தற்போது இந்த அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன. இதனால் அரசுப் பள்ளி மாணவர்களிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Related News

Latest News