தி.மு.க வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம், திருவண்ணாமலையில் இன்று நடைபெறுகிறது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தி.மு.க தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், திமுக இளைஞரணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம் திருவண்ணாமலையில் இன்று நடைபெறுகிறது. இதில் 1.30 லட்சத்துக்கும் அதிகமான நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்தச் சந்திப்பில் தி.மு.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். இந்நிலையில், தி.மு.க வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறும் இடத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு ஆய்வு மேற்கொண்டார்.
வருகை தரும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து, தற்காலிக மருத்துவமனையை திறந்து வைத்துள்ளதாக உதயநிதி தெரிவித்துள்ளார்.
